COVID – 19 : மலேசியாவில் மீண்டும் அதிகரிக்கும் பாதிப்பு..? – புதிதாக 15 பேருக்கு தொற்று..!!

Kuala Lampur Airport
Photo Courtesy : thesundaily.my

மலேசியாவில் கொரோனா குறித்து தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி) இன்று 15 பேர் புதிதாக கொரோனாவால் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் இது பாதிப்பு எண்ணிக்கையை 8779 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று மட்டும் 7 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 8553 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97.4 சதவிகிதமாக ஆக உள்ளது.

மேலும் இன்று கொரோனா காரணமாக மலேசியாவில் ஒருவர் பலியாகியுள்ள நிலையில் இறந்தவர்களின் எண்னிக்கை 123ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 15 பேரில் 4 பேர் வெளிநாடுகளில் இருந் மலேசியா திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.