‘தாயகம் திரும்பிய 139 மலேசியர்களுக்கு கொரோனா’ – அதிக பாதிப்பு ‘இந்தோனேசியாவில்’ இருந்து தான்… 

malaysians from abroad

கொரோனா காரணமாக பல நாட்டை சேர்ந்த மக்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் மலேசிய அரசு பிற நாடுகளில் தவித்து வரும் தங்கள் நாட்டு மக்களை மலேசியாவிற்கு அழைத்துவருகின்றது. ஆனால் கொரோனா பயத்தின் காரணமாக வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்புவர்களை கட்டாய தனிப்படுத்துதலில் வைக்கின்றது மலேசிய அரசு.

இந்நிலையால் அவ்வாறு வெளிநாட்டில் இருந்து தாயகம் வந்த மக்களை சோதித்ததில் 139 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 139 பேரில் 99 பேர் இந்தோனேசியாவில் இருந்து வந்தவர்கள் என்ற தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதுவரை தாயகம் திரும்பிய 12,000-க்கும் அதிகமானோருக்கு சோதனை நடப்பட்டுள்ளது என்றும், அதிக அளவாக இந்தோனேசியாவில் இருந்து வந்த மக்களுக்கு தான் பாதிப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். worldometer என்ற இணையதள அறிவிப்பின் படி உலக அளவில் சுமார் 30 லட்சம் மக்கள் இந்த கொரோனா காரணமாக பாதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.