COVID – 19 : ஒரே நாளில் கொரோனா பாதித்த 121 பேர் குணமடைந்துள்ளனர் – நூர் ஹிஷாம் அப்துல்லா

noor_hisham
Image tweeted by Noor Hisham Abdullah

படிப்படியாக மலேசியாவில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வந்தாலும் இன்னும் சிறிய அளவில் தினமும் புதிய பாதிப்புக்கள் தோன்றிவருகின்றன என்பது சற்று கலக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஆகையால் நிலவும் பொது நடமாடக்க கட்டுப்பாடு நீடிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கூறியதன் அடிப்படையில், மே 12 வரை மலேசியாவில் மேலும் கட்டுப்பாட்டை நீடித்து நேற்று அறிவித்தார் மலேசிய பிரதமர்.

இந்நிலையில் மலேசியாவில் கடந்த ஒரு வார காலமாக 100-க்கும் குறைவான அளவில் தினமும் புதிய பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று ஏப்ரல் 24ம் தேதி நிலவரப்படி மலேசியாவில் கொரோனாவால் புதிதாக 88 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5691 என்ற உச்சத்தை தொட்டுள்ளது. அதே சமயம் கொரோனாவில் இருந்து குணமடைந்து திரும்பியவர்கள் எண்ணிக்கையும் 3663 என்ற நல்ல நிலையை அடைந்துள்ளது.

மேலும் நேற்று ஒருவர் கொரோனா பாதிப்பால் இறந்தால், மலேசியாவில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் சுமார் 121 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதார அமைச்ச இயக்குனர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா நேற்று தெரிவித்தார்.