உலகம் முழுதும் பரவும் கொரோனா – ‘இந்தியா வர மலேசியர்களுக்கு தடை’

indian students

மலேசியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகின்றது, இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்குமாறும், அதே சமயம் தற்போது அளிக்கப்பட்டுள்ள இந்த விடுமுறையை பயன்படுத்தி யாரும் பயணங்கள் மேற்கொள்ளவேண்டும் என்றும் மலேஷியா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்தாலே நிச்சயம் இந்த நோயின் பரவலை தடுக்கலாம் என்று தொற்று கட்டுப்பாட்டு நிபுணர் மற்றும் பேராசிரியர் டாக்டர் அடீபா கமருல்சமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நேற்று நாடு முழுவதும் விதிக்கப்பட்ட இந்த தடை வரும் மார்ச் மாதம் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று, இந்த சமயத்தில் மலேஷியா மக்கள் பிற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தடுக்க பயணத்தடையும் விதிக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். இது ஒருபுறம் இருக்க அண்டை நாடான இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இதுவரை 3 பேர் இறந்துள்ளார்.

இதனை அடுத்து ஆப்கானிஸ்தான், மலேஷியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து இந்திய வர பயணிகளுக்கு முற்றிலும் தடை விதிப்பதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மலேஷியா விமான நிலையத்தில் சுமார் 200 இந்திய மாணவர்கள் தாயகம் செல்லமுடியாமல் தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.