COVID 19 : 3 இந்தியர்கள் உள்பட மலேசியா திரும்பிய 16 பேருக்கு நோய் தொற்று உறுதி..!

Face Mask
Picture Courtesy malay mail

மலேசியாவில் கொரோனா குறித்து தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி) இன்று 25 பேர் புதிதாக கொரோனாவால் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் இது பாதிப்பு எண்ணிக்கையை 9200 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று மட்டும் 28 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 8859 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96.3 சதவிகிதமாக ஆக உள்ளது.

மேலும் இன்று கொரோனா காரணமாக மலேசியாவில் யாரும் மரணிக்காத நிலையில் இறந்தவர்களின் எண்னிக்கை 125ஆக உள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 25 பேரில் 16 பேர் வெளிநாடுகளில் இருந்து மலேசியா திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் இரண்டு இந்தியர்களும் அடங்குவர். அண்மைக்காலமாக மலேசியாவில் உள்ளூர் தொற்று மீண்டும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms