1,50,000 இந்தியர்களை தாயகம் அனுப்ப சாத்தியம் உள்ளதா ? – காதிர் ஜாசின்

kadir jasin

புலம்பெயர்தல் என்பது பல நாடுகளில் நடக்கும் இயல்பான விஷயமே, வளம்மிக்க நாடுகளை நோக்கி அருகில் இருக்கும் பிற நாட்டுமக்கள் புலம்பெயர்வர். இதற்கு மலேசியாவும் விதிவிலக்கு அல்ல, ஆரம்ப காலம் தொட்டே அண்டை நாடான இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கு மலேசியா எப்பொதும் இடமளித்துள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்து வருபவர்களில் சிலர் தற்காலிகமாக தங்கினாலும் பலர் இங்கே இருந்து குடியுரிமையும் பெற்றுள்ளனர்,” இவ்வாறு பலர் இங்கயே தங்கி குடியுரிமை பெற்றுள்ளதாக திரு ஜாசின் குறிப்பிட்டுள்ளார்.

இன்றுவரை மலேசியா நாட்டில், இந்தியர்கள் சுமார் 150,000 பேர், ஊழியர்களாக வேலைபாற்பதாக மலேசியாவில் செயல்படும் இந்தியா துதரகம் தெரிவிகின்றது, இந்தியா ஆண்டுக்கு 9 மில்லியன் டன்னுக்கும் அதிகமான பனை எண்ணெய்யை மலேசியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது.

அண்மைகாலமாக, காஷ்மீர் தொடர்பிலான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கும், இந்தியாவின் புதிய குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்தும் டாக்டர் மகாதீர் குறிப்பிட்ட கருத்துகள் இந்திய அரசுக்கு ஏற்புடையதாக இல்லை. மேலும், இந்தியா அரசு அதிகரபுரவ அறிக்கை ஏதும் வெளியிடவில்லை என்றாலும் மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்ய வேண்டாம் என இந்திய நிறுவனங்களை இந்திய அரசு   அறிவுறுத்தியிருப்பதாகக் குறிப்பிடபடுகிறது.

காஷ்மீர் மற்றும் குடியுரிமை சட்டத் திருத்தம் ஆகியவை பற்றிய தமது நிலைப்பாட்டில் இதுவரை எந்த மாற்றமும் தெரிவிக்காத மலேசியா பிரதமர், தங்கள் நாட்டில் வாழும் சுமார் 1,50,000 இந்தியர்களை தங்கள் சொந்த நாட்டிற்கே அனுப்ப சாத்திய கூறுகள் உள்ளதா என்று ஆராயலாம் என்று பிரதமரின் தொடர்புகள் மற்றும் ஊடக ஆலோசகர் காதிர் ஜாசின் கடந்த திங்களன்று வெளியிட்ட தனது முகநூல் பதிவில் கூறினார்.