‘மலேசியாவுடன் இணைந்து செயல்பட சிங்கப்பூர் ஆயத்தமாக உள்ளது..?’ – சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம்

Sinapore Border

இந்த கோவிட் – 19 சூழ்நிலையில் மலேசிய மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் அனுதினம் சென்று வரும் பயணிகளின் தேவையை முழுமையாக நிறைவேற்றும் வகையில் மலேசிய அரசுடன் இணைந்து செயல்பட சிங்கப்பூர் அரசு ஆயத்தமாக உள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதில் குறுகிய கால தொழில்துறை மற்றும் அதிகாரபூர்வ பயணிகளாக மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே சென்று வருபவர்களும் அடங்குவர்.

அண்மைக்காலமாக இரு நாடுகளிலும் கொரோனா தொற்றின் அளவு குறைந்து வருவதை அடுத்து இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும். இரு நாட்டவரின் உடல்நலம் மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த நிகழ்வு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே கோவிட் 19 சோதனை மற்றும் இல்லத்தில் தனிமைப்படுத்ததால் இன்றி சிங்கப்பூர் மக்கள் மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு என்று மலேசிய அரசி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல மலேசியர்களும் சிங்கப்பூரில் அனுமதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இருப்பின் அவ்வப்போது தொற்றின் அளவு சற்று மேலோங்குவதால் தளர்வுகளை படிப்படியாக அமல்படுத்துவதே சிறந்தது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.