‘மலேசிய – சிங்கப்பூர் எல்லைகளை திறக்கலாம்’ – அரசிடம் கோரிக்கை வைக்கும் முன்னாள் அமைச்சர்..?

Sinapore Border

உலகில் லட்சக்கணக்கான மக்களை வாடி வதைத்து வருகின்றது கொரோனா. அதே சமயம் நியூஸிலாந்து போன்ற சில நாடுகள் கொரோனா பிடியில் இருந்து முற்றிலும் விடுபட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நோயின் தாக்கம் அண்டை நாடான இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மலேசியாவில் அண்மைக்காலமாக தொற்றின் அளவு சற்று குறைத்து வருகின்றது.

இந்நிலையில் கடந்த வாரம் வியாழன் அன்று நடத்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுகாதார அமைச்சக இயக்குனர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தொடச்சியாக 28 நாட்கள் எந்தவித நோய் தொற்றும் இல்லாமல் இருக்கும்பட்சத்தில் நாம் கோவிட் 19ல் இருந்து முழுமையாக விடுபட்டதாக அறிவிக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிங்கப்பூர் மற்றும் மலேஷியா ஆகிய நாடுகளில் தொற்று குறைந்து வருவதால் இருநாட்டு எல்லைகளை திறப்பது குறித்து அரசு முடிவு செய்யலாம் என்று சுகாதாரத்துறை முன்னாள் துணைஅமைச்சர் லீ பூன் சாய் கூறியுள்ளார். எல்லைகள் திறக்கப்பட்டு பயணங்கள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.