மலேசியா : செலாயாங் பகுதியில் அதிரடி சோதனை – ‘உரிய ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினர் கைது..?’

selayang

Selayang, மலேசியாவில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட ஒரு இடம் மேலும் கோம்பர்க் மாவட்டத்தில் தலைநகராக விளங்குகின்றது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மஸ்ஜித் இந்தியாவில் நடத்தப்பட்டதை போல ஒரு அதிரடி சோதனை நேற்று இந்த இடத்திலும் நடப்பட்டதுள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து பல அதிரடி முடிவுகளை மலேஷியா அரசு அனுதினமும் எடுத்து வருகின்றது. இந்நிலையில் நேற்று selayang பகுதியில் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனை அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோலாலம்பூர் காவல்துறையின் தலைவர் மஸ்லான் லாசிம் மற்றும் குடிவரவுத் துறை அதிகாரிகள் தலைமையில் இந்த சோதனை நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டது. மஸ்ஜித் இந்தியாவில் நடந்தது போலவே உரிய ஆவணங்கள் இன்றி அந்த இடத்தில் யாரேனும் தங்கியுள்ளனரா என்பதை அறியவே இந்த சோதனை நடத்தப்பட்டகாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சோதனையின்போது உரிய ஆவணங்கள் இன்றி அங்கு தங்கியிருந்த பல வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.