“விஸ்வரூபம் எடுக்கிறதா சிவகங்கை கிளஸ்ட்டர்..?” – 11 பேருக்கு பரவிய தொற்று – ஐந்து பள்ளிகள் மூடல்..?

Sivagangai Cluster
Picture Courtesy says.com

மலேசியாவில் பரவும் இந்த தொற்று நோயின் அளவை தடுக்க மலேசிய அரசு தன்னால் இயன்ற பல விஷயங்களை செய்து வருகின்றது. ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் முகக்கவசத்தையும் கட்டாயமாகியது. இந்நிலையில் கடந்த ஜூலை 13ம் தேதி தமிழகத்தில் உள்ள சிவகங்கையில் இருந்து மலேசியா திரும்பியவர் (நிரந்தர குடியுரிமை பெற்றவர்) நோய் தொற்று இல்லாததால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டார். ஹோட்டல் உரிமையாளரான இவர் தனிமைப்படுத்துதல் காலத்தில் தடையை மீறி வெளியில் சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு தொற்று உறுதியான நிலையில் கெடா பகுதியில் அவர் மூலமாக நேற்று மேலும் நால்வருக்கு தொற்று உறுதியானது.

இந்நிலையில் அவரது கடைக்கு கடந்த ஜூலை 13 முதல் 24ம் தேதி வரை சென்றவர்கள் அவர்களாக முன்வந்து அருகில் உள்ள சுகாதார மையத்தில் கோவிட் 19 பரிசோதனையை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் இருவருக்கு தொற்று உறுதியான நிலையில் மேலும் ஒருவருக்கு தற்போது தொற்று உறுதியானது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் நாளுக்கு நாள் தொற்றின் அளவு அதிகரித்து கொண்டே வருகின்றது. இதுவரை 11 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல், வெளிநாட்டில் இருந்து வந்த தொற்று தற்போது உள்ளுர் தொற்றாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கெடா பகுதியில் 5 பள்ளிகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms