“பாதுகாப்புடன் மாறுபட்ட தீபாவளியை கொண்டாடுவோம்” – புருஷோத்தமன்..!

Malaysia Deepavali
Tweeted File Image

உலக அளவில் இந்தியர்கள் மற்றும் தமிழர்களால் கொண்டாடப்படும் விழாக்களில் (Deepavali Malaysia) தீபாவளி திருநாளும் ஒன்று.

மலேசியாவிலும் இந்த தீப ஒளித்திருநாள் வருகின்ற நவம்பர் மாதம் 14ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. மக்கள் இந்தவிழாவிற்கு ஆயத்தமாகி வருகின்றனர். (Deepavali Malaysia)

“நேருக்கு நேர் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர்கள்”

இந்நிலையில் கொரோனா தொற்று மலேசியாவின் சில இடங்களில் அதிகரித்து வருவதால் தீபாவளி பண்டிகையை கொண்டாட புதிய SOP-க்கள் விரைவில் வெளியிடப்படும்.

இந்த தகவலை மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் அண்மையில் தெரிவித்தார். இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இன்றே இந்த SOP வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் தேசியப் பாதுகாப்பு மன்றக்கூட்டத்தில் தீபாவளி பண்டிகை குறித்து விவாதிக்கப்பட்ட பின்னர் இந்த SOP வெளியாகும் என்று தெரிவித்தார்.

கோலாலம்பூர் பகுதியில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பொது நடமாட்டக்கட்டுப்பாடு அடுத்த மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுகுறித்து பேசிய மாசாய் இந்தியர்கள் சமூகநல மேம்பாட்டுக்கான கழகத்தின் தலைவர் டத்தோ கே.புருஷோத்தமன் தனது தீப ஒளி திருநாள் வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்தார்.

அதே சமயம் பிற தீபாவளி பண்டிகைகளை போல இல்லாமல் இது மாறுபட்டதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

அரசு அறிவிக்க இருக்கும் SOP-க்களை பின்பற்றி, மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இந்த தீபாவளியை கொண்டாட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தீபாவளி சந்தைகள் மற்றும் அதற்கான அனுமதி குறித்த விஷயங்கள் முற்றிலும் விவாதிக்கப்பட்டு அதன் பிறகு முறையான செயல்பாட்டு நெறிமுறைகள் வெளியாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram