“மலேசியாவில் நான்காவது முறையாக நேற்று உள்ளூர் தொற்று இல்லை” – சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல்..!!

Noor Hisham Abdullah
Image Tweeted by Noor Hisham Abdullah

மலேசியாவில் கடந்த வாரம் தொற்றின் அளவு குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் தொற்றின் அளவு இரட்டை இலக்கத்தை தொட்டது மக்களை சற்று கலக்கத்தில் ஆழ்த்தியது. சில வாரங்களுக்கு முன்பு சுகாதார அமைச்சக இயக்குனர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா செய்தியாளர்களை சந்தித்தபோது, தொடச்சியாக 28 நாட்கள் எந்தவித நோய் தொற்றும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் நாம் கோவிட் 19ல் இருந்து முழுமையாக விடுபட்டதாக அறிவிக்க முடியும் என்று அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தினமும் தொற்று எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை தொட்ட நிலையில் நேற்று மலேசியாவில் மேலும் நால்வர் கோவிட் 19 தொற்றுக்கு உள்ளாகினர். ஆனால் அந்த நால்வரும் வெளிநாடுகளில் மலேசியா வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் நான்காவது முறையாக மலேசியாவில் உள்ளூர் தொற்று இல்லை என்பது மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

மேலும் நூர் ஹிஷாம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தற்போது நோய் தொற்று பாதித்த 6 பேருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும். மேலும் இருவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.