“ஒடுக்கப்படும் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் தொழிலார்கள்” – சிறப்பு தளம் உருவாக்கம்.?

Vaccine Abroad Workers
Image Tweeted by BFM News

முதலாளிகளால் ஒடுக்கப்படும் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் தொழிலார்கள், அந்த நிகழ்வு குறித்து புகார் அளிக்க சிறப்பு தளம் ஒன்று உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (Workers in Malaysia)

தொழிலாளர்களிடம், முதலாளிகள் அடக்குமுறையோ அல்லது சுரண்டலிலோ ஈடுபட்டாள் அவர்களை குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று மனிதவள அமைச்சர் எம். சரவணன் தெரிவித்துள்ளார். (Workers in Malaysia)

“தலைநகரில் அதிக தொற்று” – 1 லட்சத்தை தாண்டிய மொத்த பாதிப்பு எண்ணிக்கை.!

சில தினங்களுக்கு முன்பு கஜாங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையை பறவையிட்ட மனிதவள அமைச்சர் சரவணன் அங்கிருந்து தொழிலாளர்கள் நிலையை கண்டு மனம் வருந்தியுள்ளார்.

சுமார் 700-க்கும் அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கொள்கலன்களை (Shipping Container) இருப்பிடங்களாக மாற்றி கொடுத்திருக்கும் அவல நிலையை கண்டு மனம் உருகியுள்ளார்.

கஜாங்கில் உள்ள அந்த தொழிற்சாலைக்கு முன்னறிவிப்பு இன்றி அமைச்சர் பார்வையிட சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் அங்கு சென்றபோது அடிப்படை வசதி ஏதும் இல்லாமல் பல நூறு தொழிலார்கள் அங்கு அல்லல்பட்டு வருவதை கண்டு ஒரு அமைச்சர் தான் வெட்கப்படுவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சொந்த ஊரை விட்டு பிழைப்பிற்காக பிற நாடுகளுக்கு செல்வோரின் நிலை பல நாடுகளில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு ஊழியர்களை கையாள மலேசிய நாட்டிற்கென்று ஒரு தனி விதி உள்ளது. முதலாளிகள் அதை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

அந்த தொழிற்சாலை தொழிலாளர்கள் மிக குறுகிய இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் இருந்து வேளைக்கு வருவோர்க்கு அவர்கள் வருகைக்கு முன்பே உரிய வசதிகள் செய்து தரவேண்டும் என்பது அரசு விதித்த விதி.

பிழைப்பிற்காக அண்டை நாடுகளை நம்பி வருவோர்க்கு இதுபோன்ற நிலை உலக அளவில் நடந்து வருகின்றது என்பது நிதர்சனமான உண்மை.

சில தினங்களுக்கு முன்பு இந்தோனேஷியா தொழிலாளர்கள் ஒரு அறைக்குள் பூட்டிவைக்கப்பட்டிருந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது .

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram

Twitter

* Instagram