“அழுக்கான சரக்கு பெட்டகங்கள்” – நெருக்ககமாக தங்கவைக்கப்படும் ஊழியர்கள்.!

Workers in Containers
Photo Courtesy Tamil Murasu

கடந்த சில நாட்களுக்கு முன்பு மலேசிய மனிதவள அமைச்சர் சரவணன் கையுறை நிர்வாணம் ஒன்றிற்கு முன்னறிவிப்பு இன்றி திடீர் சோதனையில் ஈடுபட்டார். (Workers in Containers)

அப்போது அங்கு சரக்கு பெட்டகங்களில் (Containers) சுகாதாரமற்ற முறையில் தங்கவைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஊழியர்களை கண்டு மனம் நொந்துபோனார். (Workers in Containers)

“ஜனவரி 2021 தைப்பூசத்திருவிழா” – மலேசியாவில் சில மாற்றங்களுடன் கொண்டாடப்பட்டும்.!

இதே போன்ற ஒரு சம்பவம் தற்போது மீண்டும் காஜாங் பகுதியில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் முரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் “பிரைட்வே ஹோல்டிங்ஸ்” என்ற அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அழுக்கான கொள்கலன்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அந்த நிறுவனத்தின் மீது சுமார் 30 வழக்குகள் பதியப்படலாம் என்று கருதப்படுகிறது. மேலும் இது போன்ற சம்பவங்கள் தற்போது தொடர்கதையாகி வருகின்றது.

வெளிநாடுகளில் இருந்து வேளைக்கு வருவோர்க்கு அவர்கள் வருகைக்கு முன்பே உரிய வசதிகள் செய்து தரவேண்டும் என்பது அரசு விதித்த விதி.

பிழைப்பிற்காக அண்டை நாடுகளை நம்பி வருவோர்க்கு இதுபோன்ற நிலை உலக அளவில் நடந்து வருகின்றது என்பது நிதர்சனமான உண்மை.

சில தினங்களுக்கு முன்பு இந்தோனேஷியா தொழிலாளர்கள் ஒரு அறைக்குள் பூட்டிவைக்கப்பட்டிருந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram