‘அரசு விதியை மீறி வெளியே சென்ற பெண்’ – தொற்று உறுதியானதால் அச்சத்தில் மக்கள்..!!

Malaysia Corona
Image Tweeted by Astro AWANI

பிற நாடுகளை போல கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக பிற நாடுகளில் சிக்கியுள்ள மலேசியர்களை, தாயகத்திற்கு திரும்ப அழைத்து வருகின்றது மலேசிய அரசு. இந்நிலையில் அவ்வாறு பிற நாடுகளில் இருந்து தாயகம் வருபவர்கள் அரசு நியமித்துள்ள இடங்களில் கட்டாய தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த நிகழ்வில் அண்மையில் புதிய தளர்வை ஏற்பாடு செய்து அறிவித்தது மலேசிய அரசு.

பிற நாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் அனைவருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தப்படும். அந்த சோதனையில் கொரோனா தொற்று உள்ளவர்கள் அரசு முகாம்களில் தனிமைபடுத்தப்படுவர், அதே சமயம் தொற்று இல்லாதவர்கள் வீட்டிற்கு அனுப்படுவர். ஆனால் வீட்டிலும் அவர்கள் தங்களுடைய வீடுகளில் தங்களை தனிமைபடுத்திகொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும், நோய் தொற்று இல்லாதவர்கள் மைசெஜாத்திரா பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யவேண்டும், அதுமட்டும் இல்லாமல் தனிமைபடுதப்படும் காலம் முழுவதும் அவர்கள் அந்த கைப்பட்டையை (wristband) அணிய வேண்டும் என்றும் இஸ்மாயில் கூறியிருந்தார். இந்நிலையில் அந்த மணிக்கட்டு பட்டையை அணிந்தவாறே பொது இடங்களுக்கு சென்றுள்ளார் ஒரு பெண்மணி.

அந்த பெண்மணி மணிக்கட்டையில் அந்த அடையாளத்தோடு உணவருந்திய புகைப்படம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் கடந்த 17ம் தேதி அந்த பெண்ணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இனி மலேசியா திரும்பும் யாரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மாட்டார்கள் என்றும் அனைவரும் அரசு அறிவிக்கும் விடுதியில் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/
?? Twitter      – https://twitter.com/malaysiatms