‘முறையான SOP கட்டுப்பாடுகளுடன் நாளை பினாங்கில் கோவில் திறப்பு..!!’

Veerakaliyamman Temple

கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி தொடங்கியது கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட இயக்க கட்டுப்பட்டு. மலேசியாவில் பெருமளவில் தொற்று பரவலை தடுக்க இது மிகவும் உறுதுணையாக இருந்தது என்று பல அறிஞர்கள் கூறிவருகின்றனர். ஆயினும் தற்போது வரை இந்த நோயின் தாக்கத்தால் 100-க்கும் அதிகமானோர் இறந்துள்ளார். அதே சமயம் இதுவரை 7000-க்கும் அதிகமான மக்கள் இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த மே மாத தொடக்கத்தில் நிலவி வந்த இயக்கக் கட்டுப்பாட்டில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் மலேசியாவில் உள்ள 80-க்கும் அதிகமான தொற்று முற்றிலும் இல்லாத பச்சை மண்டலங்களில் உள்ள இந்து கோயில்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் அண்மையில் வெளியானது. திறக்க அனுமதி அளித்த கோவில்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் ஆர்.எஸ். மோகன் தெரிவித்தார். தெரிவித்துள்ளார்.

தற்போது பிரசித்தி பெற்ற பினாங்கு ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் நாளை திறக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் விதிக்கப்பட்டுள்ள விதிகளை கட்டாயம் கடைபிடித்து கோவிலை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.