மலேசியாவில் கொரோனா : பொருளாதார ஊக்கத் திட்டத்தை அறிவிப்பாரா..? பிரதமர்

malaysian primeminister

உலக நாடுகளை பெரிய அளவில் அச்சுறுத்தி வருகின்றாது கொரோனா எனப்படும் கொடிய நோய் தொற்று. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் பரவ தொடங்கிய இந்த நோய் தற்போது சுமார் 170-க்கும் அதிகமான நாடுகளில் பரவி சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோரை கொன்றுகுவித்துள்ளது. தற்போது மலேசியாவில் அதிக அளவில் பரவி வரும் இந்த நோயை தடுக்க பெரிய அளவில் போராடி வருகின்றது மலேசியா அரசு.

இந்நிலையில் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் மார்ச் மாதம் 31ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த பொது நடைமட்டக் கட்டுப்பாட்டை ஏப்ரல் 14ம் தேதி வரை நீடித்து மலேசியாவின் புதிய பிரதமர் மொஹிதீன் யாசின் உத்தரவிட்டார். கடந்த மார்ச் 25ம் தேதி இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து அன்றாட வருமானத்தை நம்பி பிழைப்பு நடந்தும் மக்கள் பெரிதும் கலங்கிப்போயினர். இந்நிலையில் அவ்வாறு சிரமப்பட்டு வரும் அனைவருக்கும் பலனளிக்கும் வகையில் அரசு ஒரு பொருளாதார ஊக்கத் திட்டத்தை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

நிச்சயம் இந்த பொருளாதார ஊக்கத்திட்டம் விவசாயிகள், டாக்ஸி மற்றும் கிராப் ஓட்டுனர்கள் உள்ளிட்ட பலருக்கு நலன்பயக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார். மேலும் விதிக்கப்பட்டிருக்கும் இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டை மதிக்காத மக்கள் மீது நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏற்கனவே இதுகுறித்து 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.