பரவி வரும் கொரோனா நோய் தொற்றால், உலகில் உள்ள பல நாடுகளும் பல இன்னல்களை சந்தித்து வருகின்றன. இந்த ஆண்டில் தொடக்கத்தில் வெகு விமர்சையாக தொடங்கப்பட்ட “The Visit Malaysia” என்று அழைக்கப்படும் VM2020 இந்த நோய் தொற்றால் பாதிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மலேசியாவை பொறுத்தவரை சுற்றுலா தலங்களுக்கு பஞ்சம் இல்லாத நாடு, அதே சமயம் இயற்கை எழில் கொஞ்சும் இடம். ஆகையால் பலர் குழுக்களாக இங்கு சுற்றுலா வருவது வழக்கம்.
சீனா புத்தாண்டை முன்னிட்டு, பல சுற்றுலா பயணிகள் அங்கு வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், பரவி வரும் நோய் தொற்றால் தங்கள் நாட்டு மக்கள் பிற நாடுகளுக்கு செல்லக்கூடாது என்ற தடையை விதித்து சீன அரசு.
இதனால் சுமார் 3000க்கும் மேற்பட்ட குழு சுற்றலா முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் சுற்றுலாவிற்காக முன் பதிவு செய்யப்பட்ட விடுதிகளையும் பலர் ரத்து செய்துள்ளார். இந்த நிலைப்பட்டால் சுற்றுலா பாதிக்குமோ என்று அஞ்சிய நிலையில், சுற்றுலாவிற்காக சீனாவை தவிர பிற நாடுகள் மீது கவனம் செலுத்தப்படும் என்று மலேசியாவின் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார துறை அமைச்சர் Datuk Mohamaddin Ketapi கூறியுள்ளார்.