மொத்தவிலை சந்தை – “பிற நாட்டு தொழிலாளர்களுக்கு அனுமதி இல்லை.?” –

Whole Sale Market
Twitter Image

மலேசியாவில் வரும் 2021ம் ஆண்டு முதல் மொத்தவிலை சந்தைகளில் உள்ளூர் பணியாளர்களுக்கு மட்டுமே வேலை என்ற உத்தரவு பலரை சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது. (Whole Sale Market)

மொத்தவிலைக் காய்கறி சங்கத்தினுடைய தலைவர் திரு. வோங் கெங் ஃபாட், இதுகுறித்து தனது கருத்தினை தற்போது வெளியிட்டுள்ளார். (Whole Sale Market)

“மலேசியா திரும்பும் வெளிநாட்டவர்கள்” – தனிமைப்படுத்துதலில் புதிய விதி.!

அந்த அறிக்கையில், ஆவணங்கள் இன்றி மலேசியாவில் வெளிநாட்டவருக்கு வேலை தரக்கூடாது என்ற உத்தரவு வரவேற்கத்தக்கதே.

ஆனால் சரியான பயண ஆவணங்கள் அனைத்து கொண்டிருக்கும் வெளிநாட்டு தொழிலார்களுக்கு தடை விதிப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அவர் தெரிவித்தார்.

கொரோனா காரணமாக, தற்போது நிலவும் இந்த இக்கட்டான சூழலில் பல தடங்கல்களை உலகின் அனைத்து நாடுகளும் சந்தித்து வருகின்றது.

இந்நிலையில் மொத்த விற்பனை சந்தையில் பிறநாட்டு தொழிலார்களை வேளைக்கு அமர்த்துவதற்கு பதிலாக உள்ளூர் தொழிலார்களை பயன்படுத்த அரசு அண்மையில் பரிந்துரை செய்தது.

ஆனால் உள்ளூர் தொழிலார்கள் சம்பளம் குறித்து பல கேள்விகள் கேட்பதாகவும், அவர்கள் செய்யும் வேலையை அவர்களே தேர்ந்தெடுக்க விரும்புவந்தாகவும் வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால் உள்ளூர் தொழிலார்கள் மீது பெரிய அளவில் நாட்டத்தை தாங்கள் செலுத்தவில்லை என்றும் அவர்கள் கூறியதாக அப்போது தகவல்கள் வெளியானது.

அண்மைக் காலமாக மலேசியாவில் முறையான ஆதாரம் இல்லாமல் தங்கியிருக்கும் பிற நாட்டைச் சேர்ந்த தொழிலார்களை கைது செய்து வருகிறது மலேசிய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.(Whole Sale Market)

ஆகையால் அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பல வியாபார சங்கங்களும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram