‘மலேசியா கொரோனா இல்லாத நாடு என்று எப்போது அறிவிக்கலாம்..?’ – விளக்கம் அளிக்கும் சுகாதார அமைச்சகம்

malaysia corona

தற்போது உலகில் லட்சக்கணக்கான மக்களை வாடி வதைத்து வருகின்றது கொரோனா. அதே சமயம் நியூஸிலாந்து போன்ற சில நாடுகள் கொரோனா பிடியில் இருந்து முற்றிலும் விடுபட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நோயின் தாக்கம் அண்டை நாடான இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மலேசியாவில் அண்மைக்காலமாக தொற்றின் அளவு சற்று குறைத்து வருகின்றது.

இந்நிலையில் கடந்த வியாழன் அன்று நடத்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுகாதார அமைச்சக இயக்குனர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தொடச்சியாக 28 நாட்கள் எந்தவித நோய் தொற்றும் இல்லாமல் இருக்கும்பட்சத்தில் நாம் கோவிட் 19ல் இருந்து முழுமையாக விடுபட்டதாக அறிவிக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தின் தொடக்கத்தில் ஒற்றை இலக்கத்தில் ஏற்பட்டு வந்த தொற்றின் அளவு தற்போது மீண்டும் இரண்டு இலக்கத்தை தொட்டுள்ளது சற்று கழகத்தை அளித்தாலும் விரைவில் கொரோனாவை ஒழிப்போம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.