‘மலேசியாவில் ஒரே நாளில் 94 பேர் பாதிப்பு’ – உயரும் பாதிப்புகளுக்கு காரணம் என்ன..?

Foreign Returns

மலேசியாவில் ஏப்ரல் 16ம் தேதிக்கு பின்னர் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் மலேசியர்களால் கொரோனா பாதிப்பின் அளவு தற்போது அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் நாடு திரும்பும் அனைவரும் கட்டாய தனிமைப்படுத்ததுலக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவை பொறுத்தவரை நேற்று மட்டும் 94 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் நாடுமுழுதும் உறுதிப்படுத்தப்பட்டது. அவற்றில் 72 பேர் சமீபத்தில் அண்டை நாடான இந்தோனேசியாவிலிருந்து தாயகம் திரும்பியவர்கள் என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா ஒரு மாநாட்டில் தெரிவித்தார். இந்நிலையில் மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் மொத்த எண்ணிக்கை 5,945 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தற்போது நிலவும் MCO எனப்படும் பொது நடமாட்டக் கட்டுப்பாடு மட்டுமே முழுமையான தீர்வு ஆகாது என்றும். மலேசிய இந்த நோயை முற்றிலும் போக்க எல்லா வகையிலும் பாடுபடும் என்றும் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.