கொரோனா : மலேசியாவும், கேரளாவும் உலகிற்கு சொல்லவருவது என்ன..? – நேர்காணல் நடத்திய DNDi..!!

Malaysia and kerala
Image tweeted by DNDi

கொரோனா வைரஸ் காரமனாக முதல் தொற்று மலேசியாவில் கண்டறியப்பட்ட நாள் முதல், தன்னுடைய அயராத பணியை மலேசிய நாட்டிற்கு அளித்து வருகின்றார் சுகாதார அமைச்சகத்தின் இயக்குனர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா. தினமும் மலேசியாவில் பரவலாக கொரோனா தொற்று குறித்த சோதனை நடத்தப்படுகிறது. அதே சமயம் இயக்குனர் ஜெனரல் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில் மேலும் ஐந்து புதிய லேப் திறக்க உள்ளதாக கூறினார்.

இவ்வாறு சிறந்த முறையில் அவர் பணியாற்றி வரும் நிலையில், சீனாவை சேர்ந்த CGTN எனப்படும் China Global TV Network என்ற நிறுமவம் கொரோனா தொற்றுநோயைக் கையாளும் உலகின் தலை சிறந்த முதல் மூன்று மருத்துவர்களில் ஒருவராக மலேஷிய சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவை அண்மையில் குறிப்பிட்டதை நாம் அறிவோம்.

இந்நிலையால் DNDi என்ற நிறுவனம் மலேசியாவும் இந்தியாவில் உள்ள கேரளா மாநிலமும் இந்த நோய் எதிர்ப்பில் உலகிற்க்கு என்ன சொல்ல விரும்புகிறது என்ற தலைப்பில், மலேசியா சார்பில் சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் மற்றும் கேரளாவின் சுகாதார அமைச்சர் சைலஜா ஆகிய இருவரோடும் நேர்காணல் நடத்தியுள்ளது. உலக அளவில் மலேசியா நல்ல முறையில் இந்த நோயை எதிர்த்து போராடுவது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetmalaysia/
?? Twitter      – https://twitter.com/malaysiatms