“இந்தியாவோடு நல்ல நட்புறவில் உள்ளோம்” – மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்..!

hishammuddin hussein
Image tweeted by hishammuddin hussein

இந்த ஆண்டில் தொடக்கத்தில் இந்தியாவின் காஷ்மீர் பகுதி குறித்து சில கருத்துக்களை அப்போதைய மலேசிய பிரதமர் மகாதீர் முகமது வெளியிட்டதை அடுத்த இந்தியா மற்றும் மலேசியா இடையிலான பாமாயில் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. மலேசியாவிடம் இருந்து அதிமுக அளவில் பாமாயில் வர்த்தகம் செய்யும் நாடுகளில் இந்தியாவும், சின்னாவும் தற்போது வரை முதன்மை வகிக்கிறது என்றால் அது மிகையல்ல.

இதனை தொடர்ந்து மலேசிய அரசியலில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது, புதிய பிரதமராக முஹிதீன் அவர்கள் பதிவு ஏற்றார். இந்நிலையில் பல மாத போராட்டத்திற்கு பிறகு தற்போது இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் மீண்டும் நட்புறவோடு இருப்பதாக மலேசியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஹிஷாமுதின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர் மலேசியாவில் பெரிக்காத்தான் நேஷனல் அரசு பதவி ஏற்ற காலத்தில் இருந்து அண்டைநாடுகளான இந்தியா மற்றும் சீனாவுடன் மலேசியா நல்ல நட்புறவோடு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இருநாடுகளிடமும் மீண்டும் தற்போது பாமாயில் வர்த்தகம் நல்ல முறையில் தொடங்கியுள்ளதாகவும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்தார். ஆகவே இந்த நாட்டுப்புறவை பயன்படுத்தி நம்மால் இன்னும் அதிக அளவில் வர்த்தகத்தை மேன்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms