இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கும் அளவிற்கு நாங்கள் பெரிய நாடு அல்ல – மலேசிய பிரதமர்

Mahathir

மலேசியாவில் உள்ள மேற்கு கடற்கரை நகரமான லங்காவியில் செய்தியாளர்களை சந்தித்த மலேசிய நாட்டு பிரதமர் மகாதீர பின்வருமாறு தெரிவித்துள்ளார் : மலேசியா மீது இந்தியா விதித்துள்ள இந்த பாமாயில் கட்டுபாட்டிற்கு பதிலடி கொடுக்கும் அளவிற்கு நாங்கள் பெரிய நாடு அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் உன்னதகுந்த என்னை பொருட்களை (Edible Oil Buyer) இறக்குமதி செய்யும் பெரிய நாடு இந்தியா என்றும், தற்போது இந்தியா மலேசிய நாட்டின் மீது விதித்திருக்கும் இந்த கட்டுபாட்டிற்கு தங்களால் பதிலடி கொடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மலேசிய பிரதமர் காஷ்மீர் மற்றும் இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்தை (CAA) குறித்து தனது நிலைபாட்டை சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டார், அன்று தொடங்கிய இந்த பாமாயில் பிரச்சனை தற்போது பூதகரமாகியுள்ளது.

இந்நிலையில், நேற்று (19.01.2020) இந்தியாவில் வர்த்தக அமைச்சரவை கூடத்தில் பேசிய அமைச்சர் ஒருவர், மலேசிய அரசாங்கம் காஷ்மர் மற்றும் இந்திய குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து பேசிய கருத்து வருதமளிபதாகவும், ஆதலால் அடுத்த வாரம் சுவிட்சர்லாந்த் நாட்டின் டாவோஸ் பகுதியல் நடக்கவிருக்கும் WEF எனப்படும் World Economic Forum என்ற மாநாட்டில் மலேசிய – இந்திய அமைச்சர்களிடையே நடைபெறுவதாக இருந்த இந்த பாமாயில் குறித்த பேச்சு வார்த்தையினை  நிராகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மலேசிய – இந்திய பாமாயில் பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படும் நல்ல வழியாக திகழ்ந்த WEF நிகழ்வினை இந்தியா தற்போது புறக்கணித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மலேசியாவின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்றும் பலரும் சிந்தித்து வருகின்றனர்.