‘விசா, சுற்றுலா பயண பாஸ் காலாவதியான வெளிநாட்டவர்கள் புதுப்பித்துக்கொள்ளலாம்..!’

Ismail

கடந்த மாதம் 18ம் தேதி முதல் மலேசியாவில் MCO எனப்படும் நடமாட்டக் கட்டுப்பாடு அமலில் உள்ளது. நோய் பரவளின் அளவை குறைக்க மிகவும் கடினமான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பல பொதுமக்கள் இந்த தடையினால் அவதிப்பட்டபோதும் தற்போது அதற்கு கிடைத்திருக்கும் பலன் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் கொரோனவை சிறந்த முறையில் எதிர்கொள்ளும் நாடுகளில் மலேசியாவும் உள்ளது. மலேசியாவில் தொற்றின் அளவும் 95 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நோய் தொற்று குறைந்ததை அடுத்து கடந்த மே மாதத்தில் இருந்து மலேசியாவில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையால் மலேசியாவில் சிக்கி தங்களுடைய விசாக்கள் மற்றும் சுற்றுலா பயண பாஸ் காலாவதியான வெளிநாட்டவர்கள் அதை குடிநுழைவு மையத்தில் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

வணக்கம் மலேசியா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இந்த MCO காலத்தில் சுற்றுலா விசா காலாவதியான வெளிநாட்டவர்கள் நேரடியாக விமான நிலையத்திற்கு சென்று தாயகம் திரும்பலாம் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சபரி யாக்கோப் அவர்கள் கூறியுள்ளார்.