‘பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு மீறல்..?’ – அபராதம் செலுத்திய மலேசிய துணை சுகாதார அமைச்சர்

Noor Azmi

மலேசியாவின் துணை சுகாதார அமைச்சர் நூர் அஸ்மி கசாலி மற்றும் பேராக் மாநில நிர்வாக கவுன்சிலர் ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) அன்று மலேசியாவில் தற்போது நிலவும் பொது நடமாடக்க கட்டுப்பாட்டை மீறியதாகவும். அதனால் அவர்களுக்கு RM1000 அபராதம் விதிக்கப்பட்டதாவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்கள் ஒரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அந்த அபராத தொகையை கட்டியதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.

பாகன் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் நூர் அஸ்மி மற்றும் பேராக் மாநில கல்வி, மனித வள மேம்பாடு, அரசு சாரா அமைப்பு மற்றும் சிவில் சமூகக் குழுவின் தலைவராக இருக்கும் ரஸ்மான் ஜகாரியா ஆகியோருக்கு RM1,000 (அமெரிக்க டாலர் மதிப்பில் 228 டாலர்) அபராதம் விதிக்கப்பட்டதாக ‘சேனல் நியூஸ் ஏசியா’ என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொது மக்கள் பலர் இந்த கட்டுப்பாட்டை மீறி அதற்காக அபராதம் செலுத்தி வரும் நிலையில், ஒரு அரசு அதிகாரி இந்த பொது நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறியதாக அபராதம் செலுத்தி இருப்பது மலேசியாவில் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.