‘நாளை முடிவடையும் வந்தே பாரத் Phase – 4..?’ – கோலாலம்பூரில் இருந்து தாயகம் வந்த 177 இந்தியர்கள்..!

Vanthe Bharath Phase 4
Image tweeted by India in Malaysia

பிற நாடுகளில் தற்போது கொரோனா தாக்கம் அதிகம் உள்ள நேரத்திலும் மலேசியாவில் இருந்து பிறநாடுகளுக்கும், பிறநாடுகளில் இருந்து மலேசியாவிற்க்கும் சிறப்பு விமானங்கள் மூலமாக மக்கள் சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு மாத காலமாக இந்திய அரசு பிற நாடுகளில் உள்ள தங்களது மக்களை வந்தே பாரத் என்ற திட்டத்தின் கீழ் சொந்தநாட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருக்கிறது. மலேசிய அரசும் சில தினங்களுக்கு முன்பு புக்கிட் ஜலீல் குடிநுழைவு மையத்தில் இருந்து பல இந்தியர்களை தன்னார்வலர்களின் உதவியோடு இந்தியாவிற்கு அனுப்பி வருகிறது.

இந்நிலையில் நேற்று வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 177 இந்தியர்களுடன் இந்திய தலைநகர் டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. கோலாலம்பூரில் புறப்பட அந்த விமானம் மாலை 5.40 மணியளவில் தலைநகர் டெல்லியை வந்தடைந்தது. அதே போல இன்றும் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இந்திய பயணிகளுடன் இன்று மாலை 7.30 மணியளவில் புறப்பட்டு திருச்சி மற்றும் கோவை ஆகிய இடங்களுக்கு ஏர் இந்திய விமானம் செல்ல உள்ளது.

இந்த விமானத்தில் பயணம் செய்ய 1050 மற்றும் 960 ரிங்கிட் பயணக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஏற்கனவே வெளியிடய அறிக்கையில் இந்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வந்தே பாரத் திட்டத்தின் Phase 4 நாளையுடன் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms