வந்தே பாரத் மிஷன் : ‘மலேசியாவில் இருந்து ஏர் இந்தியா மூலம் திருச்சி வந்த 177 இந்தியர்கள்..’

Malaysia to trichy

கொரோனா காரணமாக உலகம் முழுக்க போக்குவரத்துக்கு பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. உள்ளூர் போக்குவரத்து தொடங்கி வெளியூர் மற்றும் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்வது வரை அனைத்து வகை பயணமும் முற்றிலும் தடைபட்டது. இதனால் பல நாட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல முடியாமல் உலகின் பல நாடுகளில் சிக்கி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மலேசியா பிற நாடுகளில் சிக்கி தவித்த மலேசியர்களை தாயகம் அழைத்து வரும் அதே நேரத்தில் பிற நாடுகளை சேர்ந்த மக்களையும் அவர்களுடைய தாய்நாட்டிற்கு பாத்திரமாக அனுப்பிவைத்து வருகின்றது. இந்நிலையில் “வந்தே பாரத் மிஷன்” என்ற மிஷனின் அடிப்படியில் மலேசியாவில் சிக்கித் தவித்த 177 இந்தியர்கள் நேற்று (சனிக்கிழமை) இரவு ஏர் இந்தியா விமானத்தின் மூலம் இந்தியாவிற்கு (திருச்சிக்கு) அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 10.20 மணிக்கு அந்த விமானம் அங்கு தரையிறங்கியது. பயணிகள் அனைவருக்கும் கொரோனா தொற்று சோதனை நடத்தப்பட்டது. இதில் கொரோனா குறித்த அறிகுறி இருந்த பயணிகள் சிலர் மகாத்மா காந்தி மெமோரியல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் அனைவரும் அரசு நிறுவனங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.