“கோலாலம்பூர் முதல் கொச்சி வரை” – மீண்டும் தொடங்கிய வந்தே பாரத் சேவை..!

Vanthe Bharath
Image tweeted by India in malaysia

நம்மில் பலர் Plague, Spanish Flu போன்று உலகையே அச்சுறுத்திய பல நோய்களை குறித்து நமது வரலாற்று பாட புத்தகத்தில் படித்திருபோம். ஒரு ஆய்வின்படி இது வரை மனிதகுலத்தை கொரோனா போன்ற கொடிய நோய்கள் 20-க்கும் அதிகமான முறை தாக்கியுள்ளதாக கூறுகிறது. சிலர் ஒவ்வொரு 100 வருடத்திற்கு இது போன்ற பேரழிவு ஏற்பட்டு வருகின்றது என்று கூறி வருகின்றனர். எது எப்படியோ இக்கால மனிதகுலம் கண்ட ஒரு மாபெரும் தொற்று நோய் தான் இந்த கொரோனா என்றால் அது மிகையல்ல.

இதையும் படிங்க : “மலேசியாவில் தொற்று முற்றிலும் நீங்கும் வரை கட்டுப்பாடு வேண்டும்” – முன்னாள் சுகாதார அமைச்சர்..!

தற்போது இயல்பு வாழ்க்கை முற்றிலும் சகஜ நிலைக்கு திரும்பிவிட்ட சீனாவில் தான் இந்த கொடிய நோய் உருவெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் பல லட்சம் மக்களை பலி வாங்கியுள்ளது இந்த நோய். மனித உயிர்கள் ஒருபுறம் என்றால் பொருளாதாரத்தை இழந்து தவிக்கும் நாடுகள் பல. இதனால் பல நாடுகள் தங்கள் எல்லைகளை முடியுள்ளன விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பிற நாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க எல்லா நாட்டு அரசுகளும் பல ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

இந்நிலையில் அண்டை நாடான இந்தியா ‘வந்தே பாரத்’ என்ற திட்டத்தின் மூலம் பிற நாடுகளில் உள்ள தங்களது மக்களை தாயகம் அழைத்து செல்கின்றது. இந்நிலையில் மலேசியாவில் உள்ள இந்தியர்கள் இந்த திட்டத்தின் அடிப்படையில் தாயகம் செல்கின்றனர். தற்போது கோலாலம்பூரில் இருந்து கொச்சிக்கு 163 இந்தியர்களுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புறப்பட உள்ளது. இம்மாத இறுதி வரை (ஆகஸ்ட் 27) இந்தியா செல்லும் விமானங்களில் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Telegram      – https://t.me/malaysiatms