‘வந்தே பாரத் திட்டம் – Phase 4’ – கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு இன்று புறப்படுகிறது ஏர் இந்தியா விமானம்..!!

Indians in Kuala Lampur
Image Tweeted by India in Malaysia

தற்போது உலக முழுக்க நிலவும் இக்கட்டான சூழல் காரணமாக தாயகம் செல்லமுடியாமல் தவித்து வரும் மக்களை சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து சென்று கொண்டிருக்கிறது இந்திய அரசு. இந்நிலையில் ஏற்கனவே சில விமானங்களில் 300-க்கும் அதிகமான இந்தியர்கள் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இந்தியாவின் கொச்சி மற்றும் திருச்சி ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மலேசியாவில் செயல்படும் இந்திய high commission வந்தே பாரத் திட்டத்தின் கீழ் செயல்பட உள்ள அடுத்த கட்ட (வந்தே பாரத் – 4) (மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு) விமான சேவை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தென் இந்தியாவில் உள்ள திருச்சிக்கு IX 1623 என்ற விமானம் செல்ல உள்ளது. தற்போது அந்த விமானத்தில் பயணம் செய்ய உள்ள பயணிகளின் கோப்புகளை அதிகாரிகள் சரிபார்த்து வருவதாக மலேசியாவில் செயல்படும் இந்திய high commission தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.