“கோலாலம்பூர் முதல் திருச்சி வரை” – முடிவடையும் இம்மாத வந்தே பாரத் சேவை..!

Vande Bharath Vande Bharath Malaysia
Image tweeted by Air India Express

அண்டை நாடான இந்தியாவில் செயல்படும் ‘வந்தே பாரத்’ (Vande Bharath Malaysia) திட்டத்தின் கீழ் பல நாடுகளில் இருந்து பல லட்சம் மக்கள் இந்தியா திரும்பிவருகின்றனர்.

இன்று இரவு 8 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து (Vande Bharath Malaysia) திருச்சியை நோக்கி இம்மாதத்திற்கான கடைசி விமானம் பறக்க உள்ளது.

“சிவப்பு மண்டலமாகும் கூச்சிங்”

இன்று இரவு 8.00 மணிக்கு இந்த விமானம் புறப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து வரவிருக்கும் நவம்பர் மாதத்திற்கான விமானங்கள் தமிழகத்துக்கு நவம்பர் 6 முதல் பறக்க உள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் அனைத்து விமானங்களும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் மூலம் தான் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஒரு தகவலை ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளது.

அந்த நிறுவனம் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் லாபம் ஈட்டியிருப்பதாக தெரிவித்துள்ளது.

கடந்த 2019 – 2020 ஆண்டில் சுமார் 412 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்) ஈட்டியிருப்பதாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் டிசம்பர் மாதம் வரை செயல்பட இருக்கும் விமானங்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏர் பப்புல் மற்றும் வந்தே பாரத் சேவைகளை கொண்டு உலகின் பல நாடுகளில் இருந்து இந்தியாவிற்கும்.

இந்தியாவில் இருந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வரை விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

அதற்கு பிறகும் விமானங்கள் இயக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram

Related posts

“சிலாங்கூர் – 8 மாதத்தில் 9000-க்கும் அதிகமானோர் வேலையிழப்பு”

Editor

கொரோனா : மலேசியாவில், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2276

Web Desk

“2021 தைப்பூசத்திருவிழா” : மிதமான கொண்டாட்டங்களுடன் நடைபெற வேண்டும் – சுப்பிரமணியம்.!

Editor