“வந்தே பாரத்” – மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு 6 முக்கிய விதிகள்..!

KL to Trichy Flights
Image tweeted by Air India Express

அண்டை நாடான இந்தியா, வந்தே பாரத் (Vande Bharath) என்ற திட்டத்தின் மூலம் பிற நாடுகளில் உள்ள தங்களுடைய மக்களை தாயகம் அழைத்துச்சென்று வருகின்றது.

கடந்த மே மாதம் இறுதியில் இருந்து (Vande Bharath) இந்த திட்டத்தை அந்நாட்டு அரசு செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த மாதம் முதல் இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கும் விமான சேவையை தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க : மூடப்படாத ஆழ்துளை கிணறு : சுஜித்தின் ஐந்து நாள் போராட்டம்..!

தற்போது சிங்கப்பூர், மலேசியா, ஓமான், பக்ரின் உள்ளிட்ட பல நாடுகளுக்கு வந்தே பாரத் திட்டம் மூலம் மக்களை அனுப்பிவைத்து வருகின்றது அந்த அரசு.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து மலேசியா வரும் பயணிகளுக்கு 6 முக்கிய விதிகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விதித்துள்ளது.

அதன்படி இந்தியாவில் இருந்து மலேசியா செல்வோர் “MySejahtera” என்ற செயலியை பதிவிறக்கம் செய்து தங்களுடைய தகவல்களை பதிவிட வேண்டும்.

AIR INDIA EXPRESS NOTIFICATION

NDMA எனப்படும் National Disaster Management Agency வெளியிடும் விதிகளுக்கு உட்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வேண்டும்.

மலேசியா வந்தடையும்போது கட்டாய கொரோனா சோதனை மேற்கொள்ளவேண்டும். இதுபோன்ற 6 விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram