“வந்தே பாரத்” – விரைவில் வெளியாகும் ஜனவரி 2021-க்கான விமான பட்டியல்.!

Vande Bharath Flights
Image tweeted by Air India Express

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த டிசம்பர் 2ம் தேதி இம்மாதத்திற்கான வந்தே பாரத் திட்டம் தொடங்கப்பட்டது. (Vande Bharath Flights)

கொரோனா பெருந்தொற்று தொடங்கிய காலத்தில் இருந்து உலக அளவில் போக்குவரத்துக்கு என்பது பெருமளவு பாதிக்கப்பட்டது குறிப்பாக பன்னாட்டு பயணம். (Vande Bharath Flights)

“ஒரே நாளில் 1428 பேருக்கு பரவிய தொற்று” – பீதியில் தலைநகரம்..?

இந்த நிலையில் வெளிநாடுகளில் உள்ள தங்கள் நாட்டு மக்களை அந்த அந்த நாட்டு அரசுகள் சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து செல்ல தொடங்கியது.

மலேசியாவின் நட்பு நாடான இந்தியாவும் வந்தே பாரத் என்ற திட்டத்தை அமல்படுத்தி கடந்த மே மாதம் முதல் இந்தியர்களை தாயகம் அழைத்து சென்று வருகின்றது.

ஆனால் அந்த வகை சேவையில் வழக்கத்தை விட அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் பல புகார்களை தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏற்கனவே அடுத்த வருடம் மார்ச் மாதம் வரையிலான விமான பட்டியலை வெளியிட்டுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆனால் மலேசியா முதல் இந்தியா செல்வதற்கான அடுத்த மாத பட்டியல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்த பட்டியல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்கூட்டியே பட்டியல் அறிவிக்கப்பட்டால் அது பயணிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

அதே போல பிற விமான சேவைகளையும் விரைவில் தொடங்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram