“கோலாலம்பூர் முதல் திருச்சி வரை” – வந்தே பாரத்தின் 200வது சேவை.!

Vande Bharath 200
Image Tweeted by Indian High Commission Malaysia

மலேசியாவின் நட்பு மற்றும் அண்டை நாடான இந்தியாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுவது தான் (Vande Bharath 200) ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்.

கொரோனா காலகட்டத்தில் பிற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கும் மக்களை கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கை ஆற்றுகிறது. (Vande Bharath 200)

“அவசரநிலை பிரகடனத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்” – மாமன்னருக்கு கருணை மனு.!

இந்த பேரிடர் காலத்தில் இன்று வரை பல லட்சம் மக்கள் வந்தே பாரத் என்ற திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர்.

மலேசியாவை பொறுத்தவரை இந்தியாவிற்கு கடந்த மே மாதம் முதல் இந்த சேவை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 10 மாதங்களாக மலேசியாவில் இருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கு செயல்பட்டு வரும் இந்த சேவை கடந்த 20ம் தேதி தனது 200வது விமான சேவையை அளித்தது.

இந்த 200வது சேவையில் மலேசியாவில் சிக்கியுள்ள இந்தியர்கள் தமிழகத்தின் திருச்சி மற்றும் கொச்சி ஆகிய நகரங்களுக்கு சென்றனர்.

கடந்த பிப்ரவரி 20ம் தேதி, மலேசிய நேரப்படி மதியம் 1.58 மணியளவில் அங்கிருந்து இரண்டு விமானங்கள் புறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

வந்தே பாரத் சேவை தற்போது மார்ச் மாதம் 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான விமான விவரங்களும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவில் செயல்படும் இந்திய உயர் கமிஷன் அளித்த தகவலின்படி இதுவரை 35000-க்கும் அதிகமான மக்கள் இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram