“கொரோனா தடுப்பூசி” – நாளை மலேசியா வந்தடையும்.!

Corona Vaccine Awareness
Twitter Image

ஜெர்மன் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளில் இருந்து முதல் கட்டமாக நாளை மலேசியாவிற்கு கொரோனா தடுப்பு மருந்து வரவுள்ளது. (Vaccine to Corona)

மலேசியாவில் மூன்று கட்டங்களாக கொரோனா தடுப்பூசி மக்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என்று மலேசிய பிரதமர் முஹிதீன் யாசின் அண்மையில் தெரிவித்துள்ளார். (Vaccine to Corona)

பொருத்தம் பார்க்கும் இணையம் மூலம் விபச்சாரம்.? – மலேசிய ஆடவர் கைது.!

ஜெர்மன் மற்றும் அமெரிக்க நிறுவனங்களான Pfizer மற்றும் BioNTech ஆகிய நிறுவங்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசி மருந்தினை மலேசியா பெறவுள்ளது.

இந்த மருந்துகளை நாளை அந்த நாடுகளிடம் இருந்து பெற்று, மக்கள் பயன்பாட்டிற்கு பிப்ரவரி 26ம் தேதியில் இருந்து வழங்கப்படும் என்று செய்தி வெளியாகி உள்ளது.

பிரபல இந்திய செய்தி நிறுவனமான NDTV அண்மையில் வெளியிட்ட செய்தி குறிப்பில் இதனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனா தடுப்பூசி முதலில் தன் மீது பரிசோதனை செய்யப்படும் என்று மலேசிய பிரதமர் யாசின் அவர்கள் அறிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து மலேசியாவில் மூன்று கட்டங்களில் இந்த கொரோனா தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

பிரதமருக்கு பின் முதலில் பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 5 லட்சம் முன்களப்பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படும்.

அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை, அதிக அளவில் ஆபத்தில் உள்ள 9 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்.

அதன் பிறகு மூன்றாம் மற்றும் இறுதிக்கட்டமாக 18 வயது நிரம்பிய 16 மில்லியன் மக்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை இந்த தடுப்பூசி வழங்கு பணி நடைபெறும்.

மேற்குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்கள் தவிர மேலும் சில நிறுவனங்களிடம் இருந்து மலேசியா தடுப்பூசிகளை பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram