“பள்ளிகள் திறக்கும் முன் 50000 ஆசிரியர்களுக்கு தடுப்பூசி” – அமைச்சர் கைரி ஜமாலுடின்

Vaccine for Teachers
Image Courtesy thestar.com.my

பள்ளிகள் திறக்கும் முன்பு சுமார் 50000 ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார். (Vaccine for Teachers)

வரும் மார்ச் 1ம் தேதி முதல் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் அண்மையில் தெரிவித்தது. அதற்கான அட்டவணையையும் வெளியிட்டது. (Vaccine for Teachers)

திங்கள் to வெள்ளி : “தமிழகத்திலிருந்து, மலேசியாவிற்கு தினமும் விமான சேவை”.!

அதே சமயம் மார்ச் 1 முதல் கல்வி நிலையங்கள் திறக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு மலேசிய முன்னாள் கல்வி துணை அமைச்சர் தனது கட்டணத்தையும் முன்வைத்தார். (Vaccine for Teachers)

இந்நிலையில் மலேசியாவில் மார்ச் 1ம் தேதி முதல் பள்ளிகள் படிப்படியாக திறப்பது தற்போது உறுதியாகி உள்ளது.

மலேசியாவில் அண்மையில் கொரோனா தொற்று மீண்டும் தலைதூக்கிய காரணத்தால் பள்ளிகள் ஜனவரி மாதம் வரை புடுத்தலில் இருந்தது.

மலேசியாவின் கல்வி அமைச்சர் (Education Minister) டாக்டர் திரு. ராட்ஸி ஜிடின் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்தார்.

கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 74 விழுக்காடு பள்ளிகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது கிளந்தான், சரவாக் போன்ற பகுதிகளில் மட்டும் தொற்று இல்லாத மாநிலங்களாக திகழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் நாடுமுழுவதும் உள்ள கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளை மூட அப்போது முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது தொற்றின் அளவு சற்று குறைந்து வருவதால், மீண்டும் பள்ளிகள் திறக்க முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மார்ச் 1ம் தேதி முதல் பாலர் பள்ளியில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பள்ளி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச் மாதம் 8ம் தேதி பள்ளிகள் திறக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram