“NIP” – மலேசியாவில் உள்ள வெளிநாட்டவருக்கு இலவச தடுப்பூசி.!

Second Phase Vaccination
Picture Courtesy KKMalaysia

மலேசியாவில் தற்போது வசித்து வரும் வெளிநாட்டு குடிமக்கள், NIP எனப்படும் தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் கோவிட் 19 தடுப்பூசிகளை இலவசமாகப் பெறுவார்கள். (Vaccine for Corona)

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அமைச்சரவை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (Vaccine for Corona)

மேலும் இந்த இலவச தடுப்பூசியினை வெளிநாட்டவர்கள், மாணவர்கள், வெளிநாட்டு துணைவர்கள் மற்றும் குழந்தைகள், வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் யு.என்.எச்.சி.ஆர் அட்டை வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு வழங்க உள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் நகரில் மர்ம நோய் ஒன்று மிகவும் கடுமையாக பரவ தொடங்கியது.

அதன் பிறகு அந்த நோய்க்கு கோவிட் 19 என்ற பெயரும் இடப்பட்டது. கடந்து ஆண்டு 2020 துவக்கத்தில் இந்த நோய்யை மேற்கொள்காட்டி உலக சுகாதாரத்திற்கு அவசரநிலையை WHO பிரகடனப்படுத்தியது.

தற்போது சுமார் 15 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்றளவும் உலகின்பல நாடுகளில் இந்த நோயின் தாக்கம் தொடர்ந்து இருந்து கொண்டே வருகின்றது.

மலேசியாவிலும் தினமும் 3000-க்கும் அதிக அளவில் தொற்று பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. நேற்றும் மலேசியாவில் 3384 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதுவரை மலேசியாவில் இந்த நோயின் காரணமாக 936 பேர் மரணித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் விரைவில் மலேசிய மக்களுக்கு இலவசமாக கோவிட் 19 தடுப்பு மருந்துகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.