கொரோனா தடுப்பு மருந்தினை தன் மீது பரிசோதனை செய்ய தான் தயார் என்று தெரிவித்துள்ளார் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் புங் மொக்தார். (Vaccine for Corona)
நேற்று நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் புங் மொக்தார் இந்த பதிலினை கூறினார். (Vaccine for Corona)
“அதிகரிக்கும் குணமடைவோர் விகிதம்” – ஒரே நாளில் 1750 பேர் நலம் பெற்றனர்.!
தடுப்பு மருந்து கண்டறியப்பட்ட பின்னர் அதனை சேமித்து வைக்க நமது நாட்டில் தகுதியான இடம் உள்ளதா என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில், 2021ம் ஆண்டு 60 லட்சத்திற்கும் அதிகமான மலேசியர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மலேசிய பிரதமர் மக்களவையில் அறிவித்தார்.
சீன அரசுடன் நடந்துள்ள ஒப்பந்தத்தில் அடிப்படையில் இந்த தடுப்பூசி வழங்கப்படும் என்றும். இதற்கான சோதனை வரும் மாதத்தில் இருந்து நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். (Corona Virus Vaccine)
கடந்த நவம்பர் 24ம் தேதி சீன அரசுடன் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும் மலேசியர்கள் அனைவருக்கும் இலவசமாக இந்த கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.
சுமார் 300 கோடி வெள்ளி இந்த இலவச தடுப்பூசி வழங்க அரசு நிதி ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என்று மலேசிய செய்திநிறுவனமான தமிழ் மலர் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது நிலவி வரும் அசாதாரண சூழலை சமாளிக்க பல நாடுகளும் போராடி வருகின்றது. பல முன்னணி நாடுகள் மாற்றுமருந்தினை கண்டறிய கடுமையாக போராடி வருகின்றன.
சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களை காணொளிக்காட்சி மூலம் சந்தித்த மலேசிய பிரதர் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து குறித்து ஒரு முக்கிய தகவலை வெளியிட்டார்.
Gavi – The Vaccine Alliance, இந்த நிறுவனம் ஜெனீவா மற்றும் சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம்.
இந்த நிறுவனம் பொது மற்றும் தனியார் அமைப்புகளின் கூட்டமைப்பில் செயல்பட்டு வருகின்றது. மனித நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டறிவதே இந்த நிறுவனத்தின் நோக்கம். (Vaccine For Corona)
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
* Telegram