சிலாங்கூர் : “தடுப்பூசி மையங்களாக மாறும் தனியார் மருத்துவமனைகள்”

Second Phase Vaccination
Picture Courtesy KKMalaysia

தலைநகர் கோலாலம்பூரை தொடர்ந்து, சிலாங்கூர் பகுதியில் மேலும் மூன்று தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசி மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. (Vaccination Private Hospital)

தனியார் மருத்துவமனை சங்கத்தின் தலைவர் குல்ஜித் சிங் இந்த அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளார். (Vaccination Private Hospital)

“அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் பதிவு செய்யுங்கள்” – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.!

ஏற்கனவே கோலாலம்பூரில் இரண்டு தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசி மையங்களாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுமார் 800 சுகாதார பணியாளர்களுக்கு மார்ச் 1ம் தேதி தொடங்கி தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

அண்மையில் கொரோனா தடுப்பூசி வழங்குதலில் அடுத்தகட்டமாக தனியார் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பினை அப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா அவர்கள்.

மலேசியாவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணியில், முதற்கட்டமாக 5,71,802 முன்களப் பணியாளர்களுக்கு வழங்க அண்மையில் பட்டியல் தயாரானது.

கடந்த பிப்ரவரி 21ம் தேதி ஜெர்மன் மற்றும் அமெரிக்கா ஆகிய நகரங்களில் இருந்து முதற்கட்ட தடுப்பூசி மலேசியா வந்திறங்கியது.

மேலும் அடுத்தகட்ட தடுப்பூசி பிப்ரவரி 26ம் தேதி மலேசியா வந்திறங்கியது. மேலும் பல நாடுகளில் இருந்து தடுப்பூசிகள் பெறப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பிப்ரவரி 26ம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக இந்த கொரோனா தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

முன்னர் 5,71,802 முன்களப்பணியாளர்களின் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி வழங்கப்படும் என்றும் தகவல் வெளியானது.

படிப்படியாக அடுத்த ஆண்டு தொடக்கம் வரை அனைவருக்கும் இந்த தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram