“தடுப்பூசி சான்றிதழ்களை அங்கீகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை” – மலேசிய அரசு.!

Vaccination Certificate
Image tweeted by Hishammuddin

மலேசியா, சிங்கப்பூர் எல்லை தாண்டிய பயணத்திற்கு வசதியாக தடுப்பூசி சான்றிதழ்களை அங்கீகரிப்பதில் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது. (Vaccination Certificate)

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிஷாமுட்டின் ஹுசைன் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். (Vaccination Certificate)

“தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சனை எப்போது தீரும்”- பிரிமாஸ் சங்கம்.!

மலேசியாவில், கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களை சிங்கப்பூர் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அண்மையில் எழுந்துள்ளது.

ஜோகூர் அரசு, மலேசிய அரசுக்கு இந்த கோரிக்கையை வைத்தது. மேலும் தடுப்பூசி பெற்றோர்க்கு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அந்த அரசு தெரிவித்துள்ளது.

ஜோகூர் முதல்வர் ஹஸ்னி முகம்மது வெளியிட்ட அறிக்கையில், இந்த யோசனை பல நன்மைகளை தரும் என்று தெரிவித்தார்.

மலேசிய – சிங்கப்பூர் இடையேயான பயணம், கொரோனா தொற்று காரணமாக பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தடுப்பூசி பெற்றோரை அனுமதிக்கும் முடிவு ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நாட்டிற்கு இடையேயான பயணம் குறித்தும் ‘தடுப்பூசிக் கடப்பிதழை’ குறித்தும் ஜோகூர் முதல்வரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

அதற்கு பதில் அளித்த அவர், தடுப்பூசி பணி நிறைவடைந்ததும் அது குறித்து விளக்கம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் தடுப்பூசி பெரும் மில்லியனில் ஒருவருக்கு தான் பக்கவிளைவுகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் 90 சதவிகித அளவிற்கு தடுப்பூசி வழங்கும் பணி மலேசியாவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி மலேசியாவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram