‘இந்தியரால் நால்வருக்கு பரவிய தொற்று’ – அனைவரும் சோதனை செய்துகொள்ள அரசு வேண்டுகோள்..!

Nasi Kandar Cluster
Picture courtesy MSN.com

பிற நாடுகளில் இருந்து மலேசியா திரும்புவோர் மலேசியா வந்து இறங்கும்போது அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என்று உறுதியாகும் நிலையில் அவர்களது வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் பலர் அதை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும், அவ்வாறு தனிமைப்படுத்திக்கொள்ளாதவர்களால் நோய் தொற்றும் பரவிய நிலையில் மலேஷியா திரும்பும் அனைவரும் அரசு விடுதியில் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இது ஒருபுரம் இருக்க கடந்த ஜூலை 13ம் தேதி சிவகங்கையில் இருந்து மலேசியா திரும்பியவர் (நிரந்தர குடியுரிமை பெற்றவர்) நோய் தொற்று இல்லாததால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டார். ஹோட்டல் உரிமையாளராக கருதப்படும் அவர் தனிமைப்படுத்துதல் காலத்தில் தடையை மீறி வெளியில் சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு தொற்று உறுதியான நிலையில் கெடா பகுதியில் அவர் மூலமாக நேற்று மேலும் நால்வருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் அவரது கடைக்கு கடந்த ஜூலை 13 முதல் 24ம் தேதி வரை சென்றவர்கள் அவர்களாக முன்வந்து அருகில் உள்ள சுகாதார மையத்தில் கோவிட் 19 பரிசோதனையை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த தகவலை பிரபல செய்தி நிறுவனமான The Star நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றிய நிலையில் சுகாதார அமைச்சக ஜெனரல் நூர் ஹிஷாம் “Utterly irresponsible restaurant owner.” என்ற கருத்தினை அந்த பதிவை மேற்கோள்கட்டி தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த உணவகத்தில் பணியாற்றிய நான்கு பேருக்கும் உரிமையாளரின் உறவினர் ஒருவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms