தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்கள் – ‘கோலாலம்பூரில் செயல்படும் இந்திய High Commission கொடுத்த அப்டேட்’

India in malaysia

தற்போது உலக முழுக்க நிலவும் இக்கட்டான சூழல் காரணமாக தாயகம் செல்லமுடியாமல் தவித்து வரும் மக்களை சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து சென்று கொண்டிருக்கிறது இந்திய அரசு. இந்நிலையில் ஏற்கனவே சில விமானங்களில் 300-க்கும் அதிகமான இந்தியர்கள் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இந்தியாவின் கொச்சி மற்றும் திருச்சி ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் செயல்பட்டு வரும் இந்திய உயர் கமிஷன்சில முக்கிய தகவல்களை மலேசியாவில் இருந்த தாயகம் செல்ல இருக்கும் மக்களுக்கு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “மலேசியாவில் இருந்து (இந்தியாவிற்கு) தாயகம் செல்ல விரும்பும் பயணிகள், தங்கள் இணையத்தில் பதிவு செய்யும்போது பலர் தங்களுடைய குழந்தைகள் குறித்த தகவல்களை தர மறந்து விடுவதாகவும், தயவு செய்து மறக்காமல் குழந்தைகளுடைய தகவல்களையும் தரவேண்டும் என்றும்” அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் வரும் காலங்களில் இந்தியாவிற்கு இயக்கப்படும் விமானங்கள் குறித்த தகவல்களையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.