“இரண்டு தடுப்பூசி பெற்றவர்களுக்கு சிறப்பு சலுகை” – பரிசீலித்துவரும் மலேசிய அரசு.!

Two Dose Vaccine
Image Tweeted by Minister Khairy Jamaluddin

மலேசியாவில் இரண்டு கட்ட தடுப்பூசிகளை பெற்றவர்களுக்கு சில சிறப்பு சலுகை வழங்க அரசு பரிசீலித்து வருகின்றது என்று அமைச்சர் கஹேரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார். (Two Dose Vaccine)

மலேசியாவில் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களாக மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. (Two Dose Vaccine)

“மீண்டும் தொற்று உயர்கிறது” – எச்சரிக்கும் சுகாதார இயக்குனர் ஜெனரல்.!

அவ்வாறு இரண்டு டோஸ் தடுப்பு மருந்துகளையும் பெற்றவர்கள் குவரன்டைன் இல்லாமல் வெளிநாடு செல்லுதல் உள்ளிட்ட பல சலுகைகள் குறித்து ஆய்வு நடைபெறுகின்றது.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் தனது தரப்பில் இருந்து ஒரு அறிக்கையை அறிவியல் அமைச்சர் கஹேரி ஜமாலுட்டின் வெளியிட்டுள்ளார்.

இரண்டு டோஸ் பெற்றவர்களுக்கு பயணம் மற்றும் பிற விஷயங்களில் தளர்வு அளிப்பது குறித்து அரசு ஆய்வு செய்து வருவதை அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மலேசியா, சிங்கப்பூர் எல்லை தாண்டிய பயணத்திற்கு வசதியாக தடுப்பூசி சான்றிதழ்களை அங்கீகரிப்பதில் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிஷாமுட்டின் ஹுசைன் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மலேசியாவில், கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களை சிங்கப்பூர் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அண்மையில் எழுந்துள்ளது.

ஜோகூர் அரசு, மலேசிய அரசுக்கு இந்த கோரிக்கையை வைத்தது. மேலும் தடுப்பூசி பெற்றோர்க்கு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அந்த அரசு தெரிவித்துள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram