“கோலாலம்பூர் to திருச்சி” – வந்தே பாரத் மூலம் தாயகம் வந்த 370 பயணிகள்.!

Trichy Delhi Flight
Image Tweeted by Indian High Commission

கடந்த டிசம்பர் 29ம் தேதி வழக்கமாக இயக்கப்படும் வந்தே பாரத் திட்டம் மூலம் 370 பயணிகள் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தமிழகத்தின் திருச்சி மற்றும் டெல்லி சென்றனர். (Trichy Delhi Flight)

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 1121 மற்றும் 1625 ஆகிய இரண்டு சிறப்பு விமானங்களில் அவர்கள் தாயகம் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (Trichy Delhi Flight)

“அழுக்கான சரக்கு பெட்டகங்கள்” – நெருக்ககமாக தங்கவைக்கப்படும் ஊழியர்கள்.!

அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தாலும் பலர் வந்தே பாரத் திட்டத்தை பயன்படுத்தி தாயகம் செல்வது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு மே மாதம் முதல் இன்று வரை நூற்றுக்கணக்கான விமானங்கள் இங்கிருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்றுடன் இவ்வாண்டு (டிசம்பர்) விமான சேவை முடிவடையும் நிலையில் திருச்சி, சென்னை மற்றும் கோவை ஆகிய நகரங்களுக்கு செல்ல விமான முன்பதிவு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இன்னும் முழுமையான 2021-க்கான விமான பட்டியல் வெளியாகவில்லை என்றபோதும் திருச்சி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரகங்களுக்கான விமான முன்பதிவு தொடங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.

வந்தே பாரத் கோலாலம்பூர் – தமிழகம் மற்றும் தமிழகம் – கோலாலம்பூர் என்ற இரு வழி பயணத்தை செயல்படுத்தி வருகின்றது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தள அறிவிப்பின்படி திருச்சி மற்றும் சென்னை மார்க்கமாக வரும் விமானங்களின் முன்பதிவு தொடங்கியுள்ளது.

மேலும் விரைவில் இதற்கான முழு பயண பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram