“புதுப்பொலிவு பெறும் திருச்சி விமான நிலையம்” – அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட AAI..!

AAI
Image tweeted by Airports Authority of India

‘AAI’ என்று அழைக்கப்படும் Airports Authority of India-வின் செயல்பாட்டின் கீழ் இயங்கும் பல விமான நிலையங்கள் அண்டை நாடான இந்தியாவில் உண்டு.

குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளை வெகு சுலபத்தில் அடைய உதவும் தமிழகத்தின் திருச்சி விமான (Trichy Airport) நிலையமும் AAI-வின் கீழ் இயங்கும் ஒரு விமான நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது உலக அளவில் நிலவில் வரும் இந்த இக்கட்டான சூழலில், இந்தியாவின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயங்கும் விமானங்கள் பல திருச்சி விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தமிழகத்தில் இருந்து பிற நாடுகளுக்கு இயக்கப்படும் வந்தே பாரத் விமானங்கள் திருச்சியில் இருந்து இயக்கப்படுகிறது.

இதையும் படிங்க : “Covax Plan” : மூன்று மில்லியன் டோஸ் தடுப்புமருந்துக்கு RM600 மில்லியன் செலவாகும் – மலேசிய பிரதமர்.!

இந்நிலையில் பன்னாட்டு விமான சேவையை வழங்கி வரும் திருச்சி விமான நிலையம் மிகவும் குறைவான அளவிலான பயணிகளை மட்டுமே தாங்கும் அளவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

பல பயணிகள் இந்த காரணத்தால் சிரமப்பட்டு வந்த நிலையில் தற்போது AAI இந்த விமான நிலையத்தை விரிவுபடுத்த முடிவெடுத்துள்ளது.

ஒரு புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம், ஏடிசி கோபுரம் மற்றும் வான்வழி வசதிகளை மேம்படுத்தும் பணி தற்போது தொடங்கவுள்ளதாக AAI நிர்வாகம் அறிவித்துள்ளது. (Trichy Airport) பன்னாட்டு விமான சேவையை மக்கள் பலரும் சுலபமாக பயன்படுத்த இந்த முடிவு மிகவும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தற்போது AAI நிறுவனம் தங்களுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram