கொரோனா : மலேசியா மாநிலங்களுக்கு இடையே நிலவிய பயணத்தடை நீக்கம்

malaysian police

கொரோனா நோய் அச்சுறுத்தல் வந்த நாளில் இருந்து WHO எனப்படும் உலக சுகாதார மையம் கொரோனா பாதிப்பு குறித்து தினமும் தகவ்களை வெளியிட்டு வருகின்றது. ஆகவே மலேசிய நாட்டை பொறுத்தவரை உலக சுகாதார மையத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி நேற்று வரை, அதாவது 18.3.2020 தேதி வரை சுமார் 553 பேர் இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது மலேஷியா இந்த நோய் தாக்கத்தின் கடுமையான பகுதியில் இருப்பதால், மக்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மலேஷியா பிரதமர் அறிவுறுத்தி உள்ளார்.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு மக்கள் அரசு அறிவித்தது போல பொது நடமாட்ட கட்டுப்பாடுகளை சிறந்த வகையில் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று மலேசிய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனை மக்கள் கடைபிடிக்க தவறினால் பாதிப்பு பெரிய அளவில் இருக்கும் என்றும் அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரமாக பரவி வரும் இந்த நோயின் காரணமாக மிக பெரிய இக்கட்டில் சிக்கி இருக்கும் மலேசியாவை தங்களின் தனிப்பட்ட முயற்சியால் மக்களால் நிச்சயம் சரிசெய்யலாம் என்று அரசு தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் தங்களின் முழு ஒத்துழைப்பையும் தருமாறு மலேசிய பிரதமர் கேட்டுள்ளார். மேலும் கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி விதிக்கப்பட்ட மலேசிய மாநிலங்களுக்கு இடையே மக்கள் பயணம் மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையை தற்போது திரும்பப் பெறுவதாக மலேஷியா காவல்துறை அறிவித்துள்ளது.