மலேசியா : “Toyota மற்றும் Honda நிறுவனங்கள் தற்காலிக மூடல்”.!

Toyota Honda Plant
Image Courtesy Carlo.in

மலேசியாவில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மலாக்கா மற்றும் பின்னாங் பகுதியில் உள்ள Toyota மற்றும் Honda உற்பத்தி கூடங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது. (Toyota Honda Plant)

இதுகுறித்த அறிவிப்பு கடந்த 14ம் தேதி வெளியானது. Toyota நிறுவனத்தின் Yaris Sedan மற்றும் Hilux கார்களின் உற்பத்தி 14 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. (Toyota Honda Plant)

“பரவும் தொற்று” – மலேசியாவில் மேலும் நான்கு இடங்களில் லாக் டவுன்.!

மேலும் Honda நிறுவனத்தின் Civic மற்றும் Accord கார்களின் உற்பத்தியும் முற்றிலும் அடுத்த 14 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மலாக்கா மற்றும் பின்னாங் ஆகிய பகுதிகளில் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டை மலேசிய அரசு சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.

அதனை தொடர்ந்து பல தரப்பட்ட செயல்பாடுகள் அங்கு முற்றிலும் தடை செய்யப்பட்டது. இதன் ஒரு அங்கமாக இந்த நிறுவன மூடல் செய்யப்பட்டுள்ளது.

Toyota மற்றும் Honda ஆகிய நிறுவனங்கள் ஜப்பான் நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் என்பது குறிப்படத்தக்கது.

14 நாட்கள் கழித்து மீண்டும் நிறுவனங்கள் திறக்கப்படும் என்று அந்நிறுவன செய்தி தொடர்பாளர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

மலேசியவில் லாக் டவுன் கடந்த புதன்கிழமை நள்ளிரவில் இருந்து நடைமுறையில் உள்ளது. அனைத்து சமூக நடவடிக்கைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram