“கோலாலம்பூர் முதல் தமிழகம் வரை” – ஜனவரி 2021 விமான பட்டியல் வெளியீடு.!

Trichy to Kuala Lampur
Image tweeted by Air India Express

கோலாலம்பூர் முதல் தமிழகம் செல்லும் வந்தே பாரத் விமானங்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. ஜனவரி 2021 இந்த பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. (TN Flights List)

பிற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கும் மக்களை கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றது வந்தே பாரத். (TN Flights List)

“கோலாலம்பூர் to திருச்சி” – வந்தே பாரத் மூலம் தாயகம் வந்த 370 பயணிகள்.!

தமிழகத்தை பொறுத்தவரை திருச்சி மற்றும் சென்னை ஆகிய இரு நகரங்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 04 2021 தொடங்கி ஜனவரி 25 2021 வரை அனைத்து திங்கள் மற்றும் இரண்டு புதன்கிழமைகளில் திருச்சிக்கு விமான சேவை அளிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜனவரி 7ம் தேதி 2021 தொடங்கி 28 ஜனவரி 2021 வரை அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் விமான சேவை சென்னைக்கு வழங்கப்பட உள்ளது.

இதற்கான முன்பதிவு தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Evacuation Schedule KL to TN – Jan 2021

இந்நிலையில் Air India Express நிறுவனம் கோலாலம்பூர் செல்லும் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பினை அண்மையில் வெளியிட்டது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமானது “புறப்படும்-சேருமிடங்களுக்கு” இடையில் சேவை வழங்கும் “Point To Point” வகை சேவை அளித்துவரும் நிறுவனமாகும். சேருமிடத்திலிருந்து இணைப்பு விமானசேவைக்கு இது பொறுப்பாகாது.

மேற்குறிய இந்த அறிவிப்பை அந்த நிறுவனம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram