மலேசியாவில் கொரோனா பதற்றம் – களமிறங்கும் ராணுவம்..?

malaysia army

உலக நாடுகளை பெரிய அளவில் அச்சுறுத்தி வருகின்றாது கொரோனா எனப்படும் கொடிய நோய் தொற்று, கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் பரவ தொடங்கிய இந்த நோய் தற்போது சுமார் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் பரவி சுமார் ஆறு ஆயிரம் பேருக்கு மேல் கொன்றுகுவித்துள்ளது. தற்போது மலேசியாவில் அதிக அளவில் பரவி வரும் இந்த நோயை தடுக்க பெரிய அளவில் போராடி வருகின்றது மலேசியா அரசு.

இந்நிலையில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் மலேசியாவின் புதிய பிரதமர் மொஹிதீன் யாசின் மலேசிய நாட்டில் பொது நடமாட்ட தடையை விதித்து உத்தரவிட்டார். ஆனால் சிலர் இதை முழுமையான தடை உத்தரவு என்று கூறி வருகின்றனர். ஆனால் அப்படி ஒரு தடை விதித்தால் நீங்கள் வெளியில் நடமாட முடியாது, உணவு வாங்கக்கூட நீங்கள் வெளியில் செல்லமுடியாது என்று பிரதமர் தெரிவத்தார். தற்போது விதிக்கப்படிற்கும் தடை ஒரு முன்னெச்சரிக்கை தடை தான். இந்த நோய் மேலும் பரவாமல் இருக்க மேற்கொள்ளபட்டிருகிறது என்றார் அவர்.

இந்நிலையில் இந்த பொது நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவைத் சரியான முறையில் அமல்படுத்த மலேசிய காவல்துறைக்கு உதவியாக இருக்க மலேசிய ராணுவம் அழைக்கப்படும் என்று மலேசியாவின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். தற்போது அசாதாரண சூழலை சமாளிக்கவும், குறிப்பாக மக்கள் தங்கள் வீடுகளில் இருப்பதையும் தேவையின்றி வெளியில் வருவதையும் உறுதி செய்யதிட இராணுவம் காவல்துறைக்கு உதவ வேண்டும் என்றும் தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.