மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாடு – ‘MITI மலேசியா அளித்த புதிய தகவல்’

MITI

உலகத்தை உலுக்கி வரும் கொரோனா காரணமாக உலகம் முழுக்க பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது. சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த நோயின் காரணமாக பதித்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களை கொண்ட நாடக விளங்குகிறது, உலகின் வல்லரசு நாடான அமேரிக்கா. அங்கு சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மலேசியாவில் கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி அமலுக்கு வந்த பொது நடமாடக் கட்டுப்பாடு, முதலில் மார்ச் 31ம் தேதி வரை அறிவிக்கப்பட்டு பின்னர் ஏப்ரல் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி வெளியான பிரதமரின் அறிவிப்பு படி இந்த பொது நடமாட்டக் கட்டுப்பாடு தற்போது ஏப்ரல் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Movement Control Order எனப்படும் MCOவின் மூன்றாம் நிலை அமலில் உள்ள மலேசியாவில், செயல்படுவதற்கு ஏற்கனவே விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களோடு சேர்த்து கூடுதலாக எந்த எந்த நிறுவங்கள் செயல்படலாம் என்பது குறித்த தகவல் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது MITI (Ministry of international trade and industry) மலேசியா.